tamilnadu

img

‘ஏர் இந்தியா’வுக்கு பிரதமர் அலுவலகம் ரூ. 300 கோடி கடன்

புதுதில்லி:

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஏர் இந்தியா’, நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறது.


இந்நிலையில் ‘ஏர் இந்தியா’வுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அரசு அலுவலகங்களும் அதிகாரிகளும் செலுத்தாமல் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள விக்கு ‘ஏர் இந்தியா’ தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, மார்ச் 31 வரையில் ‘ஏர் இந்தியா’வுக்கு 598 கோடியே 55 லட்சம் பாக்கித் தொகை நிலுவையில் உள்ளது. இதில் பாதி அளவு பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து வழங்கவேண்டிய தொகையாகும். அதாவது பிரதமர் அலுவலகம் மட்டும் ‘ஏர் இந்தியா’வுக்கு 297 கோடியே 8 லட்சம் பாக்கி வைத்துள்ளது.

;